கிரிக்கெட் ஜாம்பவானும் நடிகர் சூர்யாவும் சந்திப்பு..... சினிமாவில் நுழைகிறாரா சச்சின்!!!

கிரிக்கெட் ஜாம்பவானும் நடிகர் சூர்யாவும் சந்திப்பு..... சினிமாவில் நுழைகிறாரா சச்சின்!!!

சமீபத்தில் கிரிக்கெட் ஜாம்பவனான சச்சின் டெண்டுல்கரை சூர்யா சந்தித்து அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளார்.   இருவரும் இணைந்து எடுத்த புகைப்படம் அனைத்து சமூக வலைதளங்களிலும் தற்போது வைரலாகி வருகிறது.

இன்ஸ்டாக்ராமில்:

சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் அவரது 42வது படத்தில் நடித்து வருகிறார்.  நடிகர் சூர்யா கடந்த சில மாதங்களாக மும்பைக்கு அதிக அளவிலான பயணங்களை மேற்கொண்டு வருகிறார்.  சூரரைப் போற்று திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்து வரும் நிலையில் கிரிக்கெட் ஜாம்பவனான சச்சின் டெண்டுல்கரை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துள்ளார்.  அந்த புகைப்படத்தை சூர்யா அவரது இன்ஸ்டக்ராம் பக்கத்தில் ’Love and Respect' என்ற வாசகத்துடன் வெளியிட்டுள்ளார்.

கிரிக்கெட் ஆர்வலர்:

இந்த சந்திப்பு எங்கு நடந்தது என்பதைக் குறித்த தகவல் தெளிவாக இல்லை.  சூர்யாவின் மும்பை பயணத்தின் போது சச்சினை சந்தித்து இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.  நடிகர் சூர்யா கிரிக்கெட் ஆர்வலர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.  அதனால் கூட இந்த சந்திப்பு நிகழ்ந்திருக்கலாம்.  

சினிமா ஆர்வமா?:

கிரிக்கெட் வீரர்கள் சினிமாவில் ஆர்வம் காட்டி வரும் நிலையில் சச்சினும் சினிமாவில் கால் பதிக்க உள்ளாரோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.  படப்பிடிப்பு தளத்தில் கூட இந்த சந்திப்பு நிகழ்ந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

எது எவ்வாறாயினும் படத்தைப் பார்த்த சூர்யாவின் ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.  அவர்கள் அதை ட்விட்டர் மற்றும் பிற சமூக ஊடக தளங்களில் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com