தமிழ் திரையுலகில் நாசர், லிவிங்ஸ்டன், பாக்யராஜ், சத்யராஜ், எம்.எஸ் பாஸ்கர் போன்ற பல பழம் நடிகர்கள் போல, தொடர்ந்து 4 தசாதங்களுக்கு பாலிவுட்டின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நசீருதீன் ஷா.
அமிதாப் பச்சன் முதல் இன்றைய ரன்பீர் கப்பூர் அவரை அனைவருடனும் களமிறங்கி திரையுலகை ஆண்ட ஒரு நடிகரான நசீருதின் ஷா, தனது நடிப்புக்கு மட்டுமின்றி தனது சர்ச்சைப் பேச்சுக்கும் பேர் போனவர்.
அந்த வகையில், தற்போது, ஒரு இணையத்தொடரில் நடித்துள்ள நடிகர் நசீருதின் ஷா, முகலாயர்கள் குறித்த கேள்வி எழுந்த போது, “முகலாயர்கள் பற்றிய வரலாற்றுக் கதைகளை மட்டுமே படிப்பது நிதர்சணமான உண்மை.
குறிப்பாக நமது சானகியர்கள், மௌரியர்கள், மராத்தியர்கள் போன்ற இந்திய அரசாட்சிகளை விட முகலாய அரசர்கள் பற்றிய வரலாற்றுப் பாடங்களே அதிகமாக இருக்கின்றன.” என தெரிவித்தார்.
பின், இந்திய அரசர்களை கொள்ளை அடித்த முகலாயர்களுக்கு இவ்வளவு மிகைமை எதற்கு? என பத்திரிக்கையாளர் கேட்டதற்கு, “முகலாயர்கள் என்றாலே ஒரு தவறான பிம்பம் உருவாகி இருக்கிறது.
பாபர் போன்ற கொடுரமான முகலாயர்கள் இருப்பதை நான் மறுக்கவில்லை. ஆனால், அக்பர் போன்ற நல்ல முகலாய பேரரசர்களும் இருந்தனர். அவர்கள் மக்களுக்காக பல நல்லது செய்துள்ளனர்.
மேலும் படிக்க | செல்ஃபீ எடுத்தே சாதனை படைத்த அக்ஷய் குமார்!
அப்படி அவர்கள் செய்த நல்லது எதுவும் தென்படவில்லை என்றால், அவர்கள் கட்டிய செங்கோட்டை, தாஜ் மகால், குதுப் மினார் போன்ற வரலாற்றுச் சின்னங்களை இடித்துத் தள்ளி விடுங்கள்.
அவர்கள் உண்மையிலேயே வில்லன்களாக இருந்தால் அவர்கள் கட்டிய கட்டிடங்கள் மட்டும் எதற்கு? அவர்களது வரலாற்றுச் சின்னம் மட்டும் வேண்டும், அவர்களது வரலாறு வேண்டாமா?” என கேள்வி எழுப்பினார்.
இவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை எழுப்பி வருகிறது.
மேலும் படிக்க | அறிமுக நாயகன் இஷான் நடிப்பில் ‘அரியவன்’... ட்ரைலர் வெளியீடு!!!
என்ன இந்த ‘தாஜ்- டிவைடட் பை ப்ளட்’?
கான்டிலோ டிஜிட்டலால் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘தாஜ்- டிவைடட் பை ப்ளட்’ தொடர், முகலாயப் பேரரசின் வாரிசு அரசியல் குறித்த எமோஷனல் டிராமாவை வெளிப்படுத்தும் கதையாக விவரிக்கப்படுகிறது. வில்லியம் போர்த்விக் உருவாக்கிய இந்த தொடரை, சைமன் ஃபேன்டாஸ்ஸோ எழுதி, ரொனால்ட் ஸ்கால்பெல்லோ இயக்கியுள்ளனர்.
சுபோத் பாவே, ஆயம் மேத்தா, தீப்ராஜ் ராணா, ஷிவானி டான்க்சலே, பத்மா தாமோதரன், பங்கஜ் சரஸ்வத், திகம்பர் பிரசாத் மற்றும் சச்சரி காஃபின் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த ‘தாஜ்- டிவைடட் பை ப்ளட்’ விரைவில் ZEE5 இல் ஸ்ட்ரீம் செய்யப்படும்.
மேலும் படிக்க | சென்னை நிகழ்ச்சியில் பங்கேற்ற இசைப்புயல் ரஹ்மான்!!