எல்லையை மீறிய தனுஷ் ரசிகை; ரத்தத்தால் வரைந்த ஓவியம் வைரல்:

எல்லையை மீறிய தனுஷ் ரசிகை; ரத்தத்தால் வரைந்த ஓவியம் வைரல்:
Published on
Updated on
2 min read

சேலத்தைச் சேர்ந்த ஆனந்த் குமார் என்பவர், நடிகர் தனுஷின் தீவிர ரசிகர். வருடா வருடம், தனது அன்பிற்குறிய தனுஷின் பிறந்தநாளிற்கு ஏதாவது ஒன்று வித்தியாசமாக செய்வதை வழக்கமாக் அவைத்திருக்கும் நிலையில், இந்த ஆண்டு, தனது 39 வது பிறந்தநாளைக் கொண்டாடும் தனுஷிற்கு, தனது ரத்தத்தை வைத்தே புதிய பிறந்தநாள் பரிசு கொடுத்திருக்கிறார் ஆனந்த்.

தனுஷ் பிரந்தநாளை ஒட்டி, ரத்த தானம் செய்த ஆனந்த், தனது ரத்தத்தில் ஒரு சிறிய அளவை மட்டும் பாதுகாத்து வைத்து, அதைக் கொண்டு ஒரு ஓவியத்தை வரைந்திருக்கிறார். தானே ஒரு தொழில்முறைக் கலைஞராக இருக்கும் நிலையில், தனது ரத்தத்தை வைத்தே வர் வரைந்த தனுஷ் -இன் ஓவியமானது மிகவும் தத்ரூபமாக அழகாக இருந்தது.

அந்த வீடியோவைத் தனது சோசியல் மீடியாக்களில் அவர் பகிர்ந்த நிலாஇயில், தனுஷ் ரசிகர்களும், நெட்டிசன்களும் அந்த வீடியோவைப் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர். 

தனது பிரந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி கூறி அறிக்கை விட்டிருந்த தனுஷிற்கு, மாபெர்ரும் பரிசாக, அளிக்கப்பட்டது தான் வாத்தி படத்தின் டீசர். தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான இந்த டீசர், மக்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஹாலிவுட் படமான ‘தி க்ரே மென்’ படத்தின் மூலம், உலகளவில் பல கோடி ரசிகர்களைப் பெற்றிருக்கிரார் தனுஷ். சுமார் இருபது வருடங்களாக சினிம ஔலகில் போராடி, இன்று உலகளவில் போற்றப்படும் ஒரு நடிகராக, கலைஞராக உருவாகியிருக்கும் தனுஷின் அசைக்க முடியாத ரசிகர்களின் அன்பு இது போன்ற செயல்கள் மூலம் தெரிகிறது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com