‘செங்களம்’ வெப் தொடரின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இயக்குநர் அமீர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ஆஸ்கர் விருதுகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், சிறந்த விருதுகள் எல்லாம் 30 ஆண்டுகளுக்கு முன்பே கொடுத்து முடிக்கப்பட்டு விட்டதாகவும், தற்போது வழங்கப்பட்டு வரும் விருதுகள் அனைத்துமே வெறும் லாபி எனவும் விமர்சித்தார்.
மேலும் சங்கர் இயக்கத்தில் வெளியான சிவாஜி படத்தில் நடித்ததற்காக, ரஜினிக்கு மாநில அரசு சிறந்த நடிகர் என்ற பிரிவில் விருது வழங்கப்பட்டதாக தெரிவித்த அமீர், ரஜினி சிறந்த நடிகரா? அப்படத்தில் சிறந்த நடிப்பு இருந்ததா? என கேள்வி எழுப்பினார். இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | அதிகாரப்பூர்வமாக வெளியாக தயாராகி வரும் ‘அக நக’ பாடல்...