அவருடைய மாணவர்களின் யாரும் பெரிய இயக்குனராக இல்லை.! மணிரத்னத்தை விமர்சித்து சர்ச்சையில் சிக்கிய 'திரௌபதி' பட இயக்குநர்.! 

அவருடைய மாணவர்களின் யாரும் பெரிய இயக்குனராக இல்லை.! மணிரத்னத்தை விமர்சித்து சர்ச்சையில் சிக்கிய 'திரௌபதி' பட இயக்குநர்.! 
Published on
Updated on
1 min read

திரௌபதி படத்தின் மூலம் சர்ச்சைக்குரிய இயக்குனராக மாறிய ஜி.மோகன் அவ்வப்போது சமூகவலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். அவரது சில பதிவுகள் சில நேரங்களில் சர்ச்சையாகி பரபரப்பாக பேசப்படும். அதேபோல தற்போது மீண்டும் ஒரு பதிவின் மூலம் சர்ச்சையில் சிக்கியுள்ளார். 

ஜி.மோகன் சில நாட்களுக்கு முன் இயக்குனர் மணிரத்னத்தின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்தை தெரிவித்து ட்வீட் ஒன்றை போட்டிருந்தார். அந்த ட்வீட்டில் "பல இயக்குனர்களுக்கு நீங்கள் தான் ஊக்கம். உங்களின் பொன்னியின் செல்வன் படத்திற்காக காத்துகொண்டு இருக்கிறேன்" என்று பதிவிட்டு இருந்தார். அவரின் இந்த பதிவுக்கு பலர் பல விதமாக பதில் கருத்து கூறியிருந்தனர்.

அப்போது ஒருவர்  ஒருவர் ஜி.மோகனை குறிப்பிட்டு மணிரத்னம் உன்னை போன்ற ஆட்களுக்கு எல்லாம் ஊக்கமாக இருந்திருக்கமாட்டார்கள். அவருடைய மாணவர்கள் உன்னை போல கேவலமாக படம் எடுக்க மாட்டார்கள் என்று கூறியிருந்தார். 

அதற்கு பதிலளித்த ஜி. மோகன் "அவரோட உதவி இயக்குனர்கள் யாருடா இன்னிக்கு பெரிய இயக்குனராக இருக்காங்க. சும்மா வாயில வந்ததை எல்லாம் பேசாதீங்கடா" என்று மணிரத்னத்தை தவறாகப் பேசியிருந்தார். 

இது ரசிகர்களின் கவனத்துக்கு வர மணிரத்னத்தின் உதவி இயக்குனர்களாக இருந்தவர்கள் இப்போது உன்னை விட பல மடங்கு உயரங்களுக்கு சென்றுவிட்டார்கள் என்று கூறி மோகனை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். தொடர்ந்து விமர்சனங்கள் வரவே தனது அந்த பதிவை நீக்கியுள்ளார் ஜி.மோகன்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com