விடுதலை திரைப்படம் ..! சூரியின் பேனருக்கு  பாலாபிஷேகம்...!

விடுதலை திரைப்படம் ..! சூரியின் பேனருக்கு  பாலாபிஷேகம்...!
கரூரில் நடிகர் சூரியின் விடுதலை திரைப் படத்தைக் கொண்டாடும் வகையில் தியேட்டர் முன்பு ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் , தாரை தப்பட்டை இசைத்தும் , சூரியின் கட்டவுட்டுக்கு பாலபிஷேகம் செய்து உற்சாக வரவேற்பு அளித்தனர். 
தமிழ் சினிமாவில் கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக காமெடியனாக கலக்கி வந்த சூரி இன்று வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகியுள்ள விடுதலை திரைப்படத்தின் மூலம் கதாநாயனாக அறிமுகமாகியுள்ளார்
சூரி தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் தனக்கு கிடைத்த சிறிய கதாபாத்திரத்தையும் மிகச் சிறப்பாக நடித்துவந்தார் .பின்னர் வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தில் தனது மிகச் சிறந்த காமெடியை வெளிப்படுத்தி ‘புரொட்டா சூரி’ என மக்கள் மத்தியில் அழைக்கப்பட்டார். 
அதன் தொடர்ச்சியாக நிறையப்  படங்களில்  காமெடியினாக  நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பினை  மிக சிறப்பாக பயன்படுத்தி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் , அஜித் , விக்ரம் , சூரியா ஆகியோருடன் நடித்துள்ளார்.
இந்த வெற்றியின்  தொடர்ச்சி தான் இன்று விடுதலை படத்தின் கதாநாயகன் என அறிமுகமாகக் காரணம் என்றே கூறலாம். 
விடுதலை படத்தில்  முன்னணி நடிகரான விஜய் சேதுபதி நடித்திருப்பது இந்த படத்தில் கூடுதல் பலம் சேர்க்கிறது.
இந்நிலையில் இன்று  திரையரங்கில் வெளியான விடுதலை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்த வகையில்  கரூர் திண்ணப்பா திரையரங்கில் வெளியான இப்படத்தை  ரசிகர்கள்
தியேட்டர் முன்பு  பட்டாசு வெடித்தும் , தாரை தப்பட்டை இசைத்தும் , சூரியின் கட்டவுட்டுக்கு பாலபிஷேகம் செய்து உற்சாக வரவேற்பு அளித்தனர். 
logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com