ஃபெம்-மே பிரைட் ஆப் இந்தியா2022 நிகழ்ச்சி.. பட்டங்களை வென்ற வெற்றியாளர்கள்!!

யூநீக் நிறுவனத்தின் ஃபெம்-மே பிரைட் ஆப் இந்தியா2022 நிகழ்ச்சியின் வெற்றியாளர்களான தினேஷ் ஆர்யா மற்றும் வாத்சலா ஆகியோருக்கு நிகில் சந்தன், சோனாலி ஜெயின், காஷிஷ் ஜெயின், சபரி நாயர் உள்ளிட்டோர் பட்டங்களை வழங்கினர்.
ஃபெம்-மே பிரைட் ஆப் இந்தியா2022 நிகழ்ச்சி.. பட்டங்களை வென்ற வெற்றியாளர்கள்!!
Published on
Updated on
1 min read

மிகப்பிரமாண்டமாக நடத்தப்பட்ட ஃபெம் மே ஃபேஷன் ஷோ வை கருண் ராமன் வடிவமைத்திருந்தார். 
இளம் தலைமுறையினரின் ஃபேஷன் மற்றும் திரைத்துறை கனவுகளை நனவாக்க மேடை அமைத்துத்தரும் ஃபெம்-மே   ஃபேஷன் நிகழ்ச்சியின் நடுவர்களாக விவேக் கருணாகரன், விஜய் கபூர், ரஞ்சித் கருணாகர், டாக்டர் நிஷா சீனிவாசன், திருமதி ரஞ்சிதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தரமணி நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், யூநீக் நிறுவன மேலாண் இயக்குனர் நிகில் சந்தன் சார்பில் வெற்றியாளர்களுக்கு மகுடம் வழங்கப்பட்டது.

 இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் 10 ஆண்களும் 9 பெண்களும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர்.

 ஃபெம்-மே இயக்குனர் சோனாலி ஜெயின், ஒவ்வொரு பிராண்டையும் பிரபலப்படுத்த மாடல் தேவைப்படுவதாகவும், மாடல்கள் வாய்ப்பை எதிர்பார்த்து இருப்பதாகவும் தெரிவித்தார். இவர்கள் இடையே ஃபெம்-மே இணைப்பு பாலத்தை உருவாக்குவதாகவும் தெரிவித்தார்.

மேலும், ஃபெம்- மே வின் நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் காரணமின்றி நடத்தப்படுவதில்லை எனவும் இந்த முறை நிகழ்ச்சியின் நிதி பெண்கள் நல மேம்பாட்டிற்காக ஆராத்யா தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட உள்ளதாகவும் கூறினார். 

ஃபெம்- மே மிஸ்டர் பிரைட் ஆஃப் இந்தியா 2022 பட்டத்தை ஹைதராபாத்தை சேர்ந்த தினேஷ் ஆர்யா கைப்பற்றினார். மிஸ் பிரைட் ஆஃப் இந்தியா 2022 பட்டத்தை பெங்களூருவை சேர்ந்த வாத்சல்யா தட்டிச்சென்றார்.  வெற்றியாளர்களான தினேஷ் ஆர்யா மற்றும் வாத்சல்யா ஆகியோருக்கு விவேக் கருணாகரன், விஜய் கபூர், ரஞ்சித் கருணாகர் மற்றும் கருண் ராமன் ஆகியோர் மகுடம் சூட்டினர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com