முட்டுக்காடு பகுதியில் அமைக்கப்பட்டு வரும் மிதக்கும் உணவகம் இன்னும் ஓரு மாதத்தில் நிறைவடையும் என சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.
உணவு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை சார்பில் சென்னை தீவுத்திடலில் உணவுத்திருவிழாவை சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து அரங்குகளை பார்வையிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கா.ராமசந்திரன், தீவுத்திடலில் 3 நாட்கள் உணவுத்திருவிழா நடைபெற உள்ளதாகவும், 120 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும், உணவினால் பல நோய்கள் வரும் நிலையில், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உணவுத்திருவிழா நடத்தப்படுவதாக கூறிய அவர், சிறுதானிய உணவிற்கான அரங்குகள் அதிகளவில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், சிறுதானியங்களை அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிக்க: திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் முக்கிய ஆலோசனை...!