துணிவு- வாரிசு ரிலீஸ்....கிழிக்கப்பட்ட பேனர்கள்....

துணிவு- வாரிசு ரிலீஸ்....கிழிக்கப்பட்ட பேனர்கள்....

சென்னை ரோகிணி திரையரங்கில் வாரிசு, துணிவு படம் வெளியான நிலையில், 2 நடிகர்களின் பேனர்கள் கிழிக்கப்பட்டதால் ரசிகர்கள் - போலீசார் இடையே சிறு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

துணிவு- வாரிசு:

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்கும் துணிவு, இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு ஆகிய 2 திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியானதால், அஜித், விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். அதன்படி சென்னை கோயம்பேடு பகுதியில் ரோகிணி திரையரங்கில் துணிவு, வாரிசு 2 படங்களும் வெளியாகின. 

கிழிக்கப்பட்ட பேனர்:

எனவே, இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் தனித்தனியே அங்கு கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டனர். ஒரு கட்டத்தில், திரையரங்கு வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த விஜய்யின் வாரிசு பட பேனர் அடையாளம் தெரியாத நபர்களால் கிழிக்கப்பட்டது. 

இதைத் தொடர்ந்து, அங்கு பரபரப்பு அடைந்த நிலையில், அஜித்தின் துணிவு பேனரையும் சிலர் கிழித்துள்ளனர்.  இதையடுத்து, ரசிகர்கள் காலணி, குச்சி, வாட்டர் கேன், கம்பு, கல் ஆகியவற்றை எடுத்து தியேட்டர் முகப்பு கண்ணாடி மீது வீசினர்.  இதனால், அங்கு கலவர சூழல் போன்று காட்சியளித்தது. இதையடுத்து, போலீசார் திரையரங்கு வாயில் கதவை அடைத்து, சாலையில் வாகனங்களுக்கு தொந்தரவு வராத வண்ணம் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். 

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com