குழந்தையின் பெயரை அதிகாரப்பூவமாக வெளியிட்ட  காஜல் அகர்வால் - கெளதம் கிட்சலு தம்பதி! என்ன பெயர் தெரியுமா?

குழந்தையின் பெயரை அதிகாரப்பூவமாக வெளியிட்ட காஜல் அகர்வால் - கெளதம் கிட்சலு தம்பதி! என்ன பெயர் தெரியுமா?

நடிகை காஜல் அகர்வாலுக்கு நேற்று பிறந்த ஆண் குழந்தையின் பெயரை கணவர் கெளதம் கிட்சலு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
Published on

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை காஜல் அகர்வால், மும்பை தொழிலதிபர் கௌதம் கிட்சலு என்பவரை கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் பிஸியாக படங்களில் நடித்து வந்த காஜல், கடந்த சில மாதங்களுக்கு முன் கர்ப்பம் தரித்திருந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.

இந்நிலையில் நேற்று காஜல் அகர்வால் - கெளதம் கிட்சலு தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்ததாகவும், தாயும் சேயும் நலமாக உள்ளார்கள் என்றும் செய்திகள் வெளியானது. இதனையடுத்து சக நடிகர், நடிகைகள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

இந்த தருணத்தில் சற்றுமுன் காஜல் அகர்வாலின் கணவர் கெளதம் கிட்சலு தனது சமூக வலைதளப்பக்கத்தில் தங்கள் குழந்தையின் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் தங்கள் குழந்தைக்கு நீல் கிட்சலு என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும், உங்கள் அனைவரின் ஆசியும் அந்த குழந்தைக்கு தேவை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் காஜல் அகர்வாலின் குழந்தைக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com