18 பிளஸ் படங்கள்.... ஆனா இந்த படம் என்னோட பிம்பத்தை மாத்தும்... ஜிவி பிரகாஷ் ஓபன் டாக்

ஜெயில் படம் அந்த பிம்பத்தை நிச்சயம் மாற்றி அமைக்கும் என ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்
18 பிளஸ் படங்கள்.... ஆனா இந்த படம் என்னோட பிம்பத்தை மாத்தும்... ஜிவி பிரகாஷ் ஓபன் டாக்
Published on
Updated on
1 min read

கோலிவுட்டின் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் தான் ஜி வி பிரகாஷ். வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜிவி பிரகாஷ், அதன்பின்னர், பொல்லாதவன், ஆயிரத்தில் ஓருவன், மதராசபட்டினம், ஆடுகளம், தெய்வத்திருமகள், மயக்கம் என்ன, அசுரன், சூரரைப் போற்று போன்ற படங்களுக்கு இசையமைத்து ஹிட் கொடுத்துள்ளார்.  இவர் இசையில் மட்டுமல்லாது திரைப்படங்களிலும் படு பிசியாக நடித்து வருகிறார். இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”ஜெயில்”. டிசம்பர் 9ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

இந்த படத்தின் டீசர், போஸ்டர் போன்றவை வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது படத்துக்கான ப்ரமோஷன் பணிகளில் படக் குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இதற்கிடையில் பேச்சுலர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஓடிகொண்டிருக்கிறது. சமீபத்தில் ஒரு பேட்டியில் ஜி வி பிரகாஷிடம் உங்கள் படங்கள் 18 பிளஸ் படங்களாக இருக்கும் என்ற ஒரு பிம்பம் நிலவுகிறது இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த ஜிவி பிரகாஷ் த்ரிஷா இல்லனா நயன்தாரா, பேச்சுலர் இந்த திரைப்படங்கள் மட்டுமே கொஞ்சம் ரொமான்டிக்காக இருந்தது. மற்றபடி என்னுடைய திரைப்படங்கள் அப்படி இல்லை. இதுவரை நான் 19 படங்களில் நடித்திருக்கிறேன். ஒருவேளை அப்படி இருந்திருந்தால் என்னுடைய ஜெயில் படம் அந்த பிம்பத்தை நிச்சயம் மாற்றி அமைக்கும் என ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com