‘இந்தியன் 2’ – மாஸ் அப்டேட் கொடுத்த இயக்குநர் ஷங்கர்...!!

‘இந்தியன் 2’ – மாஸ் அப்டேட் கொடுத்த இயக்குநர் ஷங்கர்...!!

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள ‘இந்தியன் 2’ படத்தை  குறித்து இயக்குநர் ஷங்கர் ஒரு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.  

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துவந்த இந்தியன் 2 படம் விபத்து உள்ளிட்ட காரணங்களால் பாதியில் நின்றது.  கமலின் ‘விக்ரம்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால் தற்போது ‘இந்தியன் 2’ படத்தை மீண்டும் தொடங்கியுள்ளனர்.   படத்தின் கிளைமாக்ஸ் ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் ஷங்கர் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் இருவரும் இணைந்து படத்திற்கான இசையை உருவாக்கிவரும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.  இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com