சினிமா பிரபலங்களின் ஒரே ஒரு பதிவிற்கு இவ்வளவு கோடி சம்பளமா..? வாய்பிளக்க வைத்த தகவல்கள்!!

சினிமா பிரபலங்களின் ஒரே ஒரு பதிவிற்கு இவ்வளவு கோடி சம்பளமா..? வாய்பிளக்க வைத்த தகவல்கள்!!
Published on
Updated on
2 min read

சினிமா துறையில் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்கள் அனைவரும் படங்களில் மட்டுமில்லாமல் தாங்கள் உபயோகிக்கும் சமூக வலைதளபகங்கள் மூலமாகவும் சம்பாதித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர்கள் அதன்மூலம் தங்கள் ரசிகர்களுடன் பேசுவது, தங்களுடைய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிடுவது என ஒவ்வொன்றின் மூலமும் சம்பாதித்து வருகின்றனர்.  

இதையும்தாண்டி ஒருசில பிரபலங்கள் சோஷியல் மீடியா பக்கங்களில் விளம்பர வீடியோக்களை வெளியிட்டு அதன்மூலமும் சம்பாதித்து வருகின்றனர். இந்நிலையில் சோஷியல் மீடியாவான இன்ஸ்டாகிராம் செயலியில் அதிக பாலோவர்ஸ்களை வைத்திருக்கும் சில பாலிவுட் பிரபலங்களும்,  அதற்காக அவர்கள்  வாங்கும் சம்பளம் குறித்த தகவல்களும் தற்போது  வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.

அந்த வரிசையில் முதல் இடத்தில் இருப்பவர் நடிகை பிரியங்கா சோப்ரா. பாலிவுட்டில் மட்டுமல்லாது தற்போது ஹாலிவுட் அளவிற்கு மிகப்பெரிய நட்சத்திரமாக உயர்ந்திருக்கும் இவரை இன்ஸ்டாவில்  73.8 பில்லியன் ரசிகர்கள் பின்தொடர்கின்றனர். இதனால் நடிகை பிரியங்கா பதிவிடும் ஒவ்வொரு பதிவிற்கும் கிட்டத்தட்ட 1.8 கோடி சம்பளம் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து இரண்டாவது இடத்தில் இருப்பவர்  நடிகை தீபிகா படுகோன்.   பாலிவுட் பியூட்டி என அழைக்கப்படும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 64.1 மில்லியன் பாலோயர்களை கொண்டிருக்கிறார். இதனால் அவர் பதிவிடும் ஒவ்வொரு பதிவிற்கும் 1.5 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

அடுத்ததாக மூன்றாவது இடத்தில் பாலிவுட்டின் கிங்க் என அழைக்கப்படும் நடிகர் அக்சய் குமார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 59.3 மில்லியன் பாலோயர்களை கொண்டிருக்கிறார். இதனால் அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் ஏறக்குறைய 1 கோடி சம்பளம் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.அடுத்த நிலையில் இருப்பவர் நடிகை ஆலியா பட். அவரை சுமார் 58.7 மில்லியன் ரசிகர்கள் பின்தொடர்கின்றனர். இவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் ஏறக்குறைய 1 கோடி சம்பளம் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.


 இவரைத்தொடர்ந்து பாலிவுட்டின் முன்னணி நடிகரான நடிகர் ஷாருக்கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 27.9 பாலோயர்களைக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் நடிகர் ஷாருக் பதிவிடும் ஒவ்வொரு பதிவிற்கும் கிட்டத்தட்ட 80 லட்சம் முதல் சம்பளம் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இப்படி சோஷியல் மீடியா மூலம் இவர்கள் ஒவ்வொருவரும் வாங்கும் சம்பளத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இவ்வளவு சம்பளமா..? என வாயடைத்து போய்விட்டனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com