கில்லி பட நடிகர்,... ' இப்போ ராமசாமி ' -க்கு இப்ப கல்யாணம்...!

கில்லி பட  நடிகர்,... ' இப்போ ராமசாமி ' -க்கு      இப்ப  கல்யாணம்...!
Published on
Updated on
2 min read

கில்லி, தூள் படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரீட்சயமான நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி 2-வது திருமணம் செய்துள்ளார். திரையில் பார்வையால் மிரட்டிய நடிகர் தற்போது, நிஜ வாழ்க்கையில் காதல் நாயகனாக ஜொலித்திருக்கிறார். 

கேரள மாநிலம் கண்ணூரில் பிறந்து வளர்ந்த ஆசிஷ் வித்யார்த்தி 1991-ம் ஆண்டு கால் சந்தியா என்ற இந்தி படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். 

தமிழில் தில் படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமான ஆசிஷ் வித்யார்த்தி, பாபா, ஏழுமலை, பகவதி, தமிழ், தமிழன், கில்லி ஆகிய திரைப்படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். தென்னிந்தியாவின் அனைத்து மொழிகளிலுமே நடித்து முடித்த பான் இந்திய நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி;  1993-ம் ஆண்டு பாடகியும், ரேடியோ ஜாக்கியுமான ராஜோஷி என்பவரை திருமணம் செய்து கொண்டார். 

இவ்வாறிருக்க, ராஜோஷியை திருமணம் செய்த போதிலும் இருவருக்குள்ளும் எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வந்தனர். மேலும், தனிமை விரும்பியாக இந்தியாவை சுற்றி வந்த ஆசிஷ் வித்யார்த்தி அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் சில வீடியோக்களை போட்டு வைந்தார். 

இந்த நிலையில் அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்த தொழிலதிபர் ருபாலி பரூவா என்பவருடன் டேட்டிங் செய்து வந்தார் ஆசிஷ்.

இவர்களின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரானதைத் தொடர்ந்து , ஆசிஷ் 33 வயதான  வித்யார்த்தி ருபாலி பரூவாவை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். 

இவ்வாறிருக்க,  முதல் மனைவி ராஜோஷியை பிரிந்தவர் தற்போது 60 வயதில் இரண்டாவது திருமணம் செய்திருப்பதை அறிந்த ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com