சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் நடிகை ரஷ்மிகா மந்தான்னா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் தெலுங்கு இயக்குனர் அனுதீப் உடன் கூட்டணி அமைக்க இருப்பதாகக் கூறப்படும் நிலையில், தெலுங்கில் நவீன் பொலிசிட்டி நடிப்பில் வெளியான ஜதிரத்னலு திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. அந்தப் படத்தை அனுதீப் தான் இயக்கியிருந்தார். தற்போது சிவகார்த்திகேயன் இயக்குனர் அனுதீப் உடன் புதிய படத்தில் கூட்டணி அமைக்க இருப்பது உறுதியாகியுள்ளது. அந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக இருப்பதாகவும் ஏசியன் சினிமாஸ் நிறுவனத்தின் நாராயன் தாஸ் நாரங் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தான்னா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.