விடுதலையானார் யூடியூபர் டிடிஎஃப் வாசன்..!

விடுதலையானார்  யூடியூபர்  டிடிஎஃப் வாசன்..!

சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கிய நிலையில், 44 நாட்களுக்கு பிறகு புழல் சிறையில் இருந்து யூடியூபர் டிடிஎஃப் வாசன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரத்தில் இருசக்கர வாகனம் மூலம் விபத்து ஏற்படுத்திய வழக்கில் கடந்த செப்டம்பர் மாதம் 19 -ம் தேதி யூ-டியூபர் டிடிஎஃப் வாசன் கைது செய்யப்பட்டார்.

இருமுறை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் அவரது ஜாமின் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

அவருடைய ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்த நீதிமன்றம் நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கியது. இதனையடுத்து 44 நாட்கள் கழித்து புழல் சிறையில் இருந்து டிடிஎஃப் வாசன் விடுதலையானார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com