“அப்போதிலிருந்தே எனக்கு அவரைத் தெரியும்”- லெஜெண்ட் குறித்து பேசிய தமன்னா:

தி லெஜெண்ட் திரைப்படம் குறித்து நடிகை தமன்னா ஒரு வீடியோ வெளியிட்டு அதில் மகிழ்ச்சியாக பேசி, படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“அப்போதிலிருந்தே எனக்கு அவரைத் தெரியும்”- லெஜெண்ட் குறித்து பேசிய தமன்னா:

சரவணா ஸ்டோர்ஸ் என்ற ஜவுளி சாம்ராஜ்ஜியத்தை நடத்தி வந்த சரவணன் தற்போது தி லெஜெண்ட் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். தி லெஜெண்ட் ப்ரோடுக்க்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் ஜேடி & ஜெர்ரி இயக்கியுள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள படத்தின் இசை உரிமையை  திங்க் மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது. படத்தில் சரவணனுக்கு ஜோடியாக ஊர்வசி ரௌட்டலா நடித்துள்ளார். மேலும் படத்தில், பிரபு, விவேக்,மயில்சாமி, நாசர், தம்பி ராமைய்யா, சுமன், ராய் லட்சுமி, ரோபோ சங்கர் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். படத்தின் first லுக் போஸ்டர் வெளியானதில் இருந்தே படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது. படத்தின் பாடல் வரிகளை வைரமுத்து, மதன் கார்க்கி, பா.விஜய், கபிலன், சினேகன் ஆகியோர் எழுதியுள்ளனர். கடந்த மே மாதம் 29 ம் தேதி படத்தின் தமிழ் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்றது.  

தி லெஜெண்ட் திரைப்படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் ஜூலை 28 ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

படத்தின் தெலுங்கு ட்ரைலரை ஜூலை 16 ம் தேதி நடிகை தமன்னா வெளியிட்டார். அதே போல் படத்தின் கன்னட ட்ரைலரை நடிகை ராய் லட்சுமி ஜூலை 17 ம் தேதி வெளியிட்டார். மேலும் படத்திற்கு தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் தி லெஜெண்ட் எனவும், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் டாக்டர் எஸ். தி லெஜெண்ட் எனவும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தி வெளியீட்டு உரிமையை நம்பி ராஜனின் கணேஷ் பிலிம்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.  

முன்னதாக படத்தில் இருந்து 3 பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகை தமன்னா, திரைப்படம் குறித்து ஒரு படம் வெளியிட்டார். அதில், " சரவணன் சார் நடித்துள்ள தி லெஜெண்ட் படம் ஜூலை 28 ம் தேதி வெளியாக உள்ளது. நான் என் கரியர் தொடக்கத்தில் சரவணன் சாருடன் நிறைய பணி செய்திருக்கிறேன். எதற்கென்றால் சரவணா ஸ்டோர்ஸ் - காக எத்தனையோ விளம்பரங்கள் செய்திருக்கிறோம். அப்போதிலிருந்தே அவரை எனக்கு தெரியும். அவர் ஒரு நடிகராக வேண்டும் என நினைத்தார். இந்த படம் மூலமாக அது நிறைவேறியுள்ளது. அவருக்கு எனது வாழ்த்துக்கள், இயக்குனர்கள் ஜேடி, ஜெர்ரி அவர்கள் முதன்மையானவர்கள்.  இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் ஆகிய இருவரும் எனது கரியரில் மிக முக்கியமானவர்கள். அவர்கள் அனைவருக்கும் எனது தரப்பில் இருந்து வாழ்த்துகள். எல்லோரும் இந்த திரைப்படத்தை திரையரங்கில் சென்று பாருங்கள். மேலும் மொத்த படக்குழுவிற்கு எனது வாழ்த்துக்கள் " என மகிழ்ச்சியாக பேசியுள்ளார்.