நடிகர் சிவக்குமார் ஒரு ஜாதி வெறியர்: பணத்தை வெள்ளையாக்கவே சூர்யா குடும்பத்தினர் டிரஸ்ட் வைத்துள்ளனர்:ஜான் பாண்டியன் வீடியோ வைரல்...

நடிகர் சிவக்குமார் ஒரு ஜாதிவெறியன் என்றும் நடிகர் சூர்யா கருப்பு பணத்தை மாற்றவே அறக்கட்டளை நடத்தி வருவதாக  தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
நடிகர் சிவக்குமார் ஒரு ஜாதி வெறியர்: பணத்தை வெள்ளையாக்கவே சூர்யா குடும்பத்தினர் டிரஸ்ட் வைத்துள்ளனர்:ஜான் பாண்டியன் வீடியோ வைரல்...
Published on
Updated on
1 min read

தமிழக திரையுலகில் மிகவும் ஒழுக்கமானவர், தனிமனித ஒழுக்கத்தில் சிறந்தவர் என மதிக்கப்படுபவர் நடிகர் சிவகுமார், அதேபோல அவரது மகன்கள் சூர்யா, கார்த்திக் ஆகியோரும் தொண்டு நிறுவனம் நடத்தி ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி சேவையாற்றி வருகின்றனர். சூர்யாவின் அகரம் அறக்கட்டளையால் ஏராளமான ஏழை மாணவர்கள் கல்வி பயின்று சமுதாயத்தில் நல்ல இடத்தில் உள்ளனர்.

நடிகர் சிவக்குமார் குறித்து தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.  இதில் நடிகர் சூர்யாவை பற்றி  பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். படத்தில் செய்ததைப் போல் நிஜத்தில் எத்தனை பட்டியலின மாணவர்களின் கல்விக்கு சூர்யா உதவியிருக்கார். படத்தில் இருப்பது போல் நிஜத்தில் அவர் நடந்துகொள்வதில்லை என ஜான் பாண்டியன் கூறி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் அவர், நடிகர் சிவக்குமாரை சாதி வெறியர் என கூறியுள்ளது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஒருமுறை கோவையில் விமான நிலையத்தில் நடிகர் சிவகுமாரை சந்தித்தேன். அப்போது அவரது மகன் சூர்யாவும் அங்கு இருந்தார். சூர்யாவை பார்த்ததும் மக்கள் ஆர்வமுடன் வந்து செல்பி எடுத்துக் கொண்டு இருந்தனர். அப்போது சிவகுமார் என்னிடம் வந்து நீங்கள் எனது மகன் சூர்யாவுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளக்கூடாது எனக் கூறினார். அதைக் கேட்டு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இதன்மூலம் தான் நடிகர் சிவகுமாரிடத்தில் சாதிவெறி இருப்பதை உணர்ந்ததாக ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார்.  இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com