
ஜெயிலர் திரைப்படத்தின் “காவாலா” பாடல் இன்று வெளியாகும் என படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.
இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தில் அனிருத் இசைமைத்துள்ளதால் ரசிகர்கள் ஆர்ப்பரிப்பில் இருக்கின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு ஜெயிலர் திரைப்படத்தின் முதல் சிங்கிள் “காவாலா” பாடலின் ப்ரோமோ வெளியாகியிருந்தது. அனிருத்தின் இசையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாயின நிலையில், இன்று மாலை 6 மணியளவில், 'காவலா' பாடல் வெளியாகிறது என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
#Jailer First Single - #Kaavaalaa will be out this evening at 6pm