காந்தாரா 2? எப்போது தெரிந்துகொள்ளலாமா?

பிரபல காந்தாரா படத்தின் இரண்டாம் பாகம் தயாராகும் என இயக்குனர் தகவலளித்துள்ளார்.

காந்தாரா 2? எப்போது தெரிந்துகொள்ளலாமா?

ரிஷப் ஷெட்டி இயக்கத்தில், கே.ஜி.எஃப் படம் தயாரித்த ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான பிரம்மாண்ட ஆன்மீக படம் தான் ‘காந்தாரா’. ரிஷப் ஷெட்டியே இயக்கியும் நடித்தும் வெளியான இந்த படம், கருத்து ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வெற்றி பெற்றது.

கன்னடத்த்ல் உருவான இந்த படம், பான் இந்தியா படமாக வெளியானது. ஆனால், இந்த படம் இந்தியளவில் மட்டுமல்ல, உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், ஆஸ்கருக்கும் இந்த படம் பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | எது? கில்லி ஜோடி இனி இல்லையா? அப்போ 14 வருஷ தவம் எல்லாம் வீணா?

இந்த நிலையில், காந்தாரா படத்தின் 100வது நாள் கொண்டாட்டத்தில் காந்தாரா படத்தின் 2-வது பாகம் நிச்சயம் உருவாகும் என்றும், காந்தாரா படத்திற்கு முந்தைய காலகட்டத்தில் நடக்கும் கதையாக இந்த படம் உருவாகும் என்றும் ரிஷப் அறிவித்துள்ளார்.

அதாவது தற்போது வெளியான காந்தாரா படத்தின் ப்ரீகுவல் படமாக காந்தாரா 2 இருக்க போகிறது என அதிகாரப்பூர்வமாக ரிஷப் ஷெட்டி அறிவித்துள்ளது சினிமா ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | “நான் வெறும் நடிகன் தான்” - நடிகர் விஜய் சேதுபதி...