தசரா ஷூட்டிங் நிறைவு நாளில்...கீர்த்தி சுரேஷ் பண்ண ஒரு விஷயம்...குவியும் பாராட்டுகள்!

தசரா ஷூட்டிங் நிறைவு நாளில்...கீர்த்தி சுரேஷ் பண்ண ஒரு விஷயம்...குவியும் பாராட்டுகள்!

Published on

தசரா படத்தின் ஷூட்டிங் நிறைவு நாளின் போது அப்படத்தின் கதாநாயகி கீர்த்தி சுரேஷ் செய்த செயல் ஒன்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

நடிகை கீர்த்தி சுரேஷ் :

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், தமிழில் “இது என்ன மாயம் “ என்ற திரைப்படம் மூலம் தமிழில் எண்ட்ரீ கொடுத்தார். அடுத்தடுத்து சிவகார்த்திகேயன், விஜய் உள்ளிட்ட பிரபலங்களுடன் இணைந்து நடித்து தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென் இந்திய மொழித்திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். 

தமிழ் - தெலுங்கு :

அந்தவகையில் தற்போது இவரது நடிப்பில், மாமன்னன், சைரன், ரிவால்டர் ரீட்டா, ரகுதாதா போன்ற தமிழ் படங்களிலும், போலா ஷங்கர், தசரா உள்ளிட்ட தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இதில் மாரி செல்வராஜ் இயக்கும் மாமன்னன் படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாகவும், சைரன் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாகவும் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இதுதவிர அவர் நடிப்பில் தமிழில் உருவாகி வரும் ரிவால்டர் ரீட்டா மற்றும் ரகுதாதா ஆகிய இரு படங்களுமே கதாநாயகியை மையமாக வைத்து உருவாகும் படங்களாகும்.

தசரா படத்தின் ஷூட்டிங் நிறைவு :

அதேபோன்று, தெலுங்கில் உருவாகி வரும்  போலா ஷங்கர் படத்தில் சிரஞ்சீவிக்கு தங்கையாகவும், தசரா படத்தில் நடிகர் நானிக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இப்படத்தின் ஷூட்டிங் அண்மையில் தான் நிறைவடைந்தது.

குவியும் பாராட்டுகள் :

இந்நிலையில், தசரா படத்தின் ஷூட்டிங் நிறைவு நாளின் போது நடிகை கீர்த்தி சுரேஷ் செய்த தங்கமான செயல் ஒன்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. அது என்னவென்றால், அப்படத்தின் ஷூட்டிங் நிறைவு நாளின் போது அப்படத்தில் பணியற்றிய சக நடிகர்கள், டெக்னீஷியன்கள் என மொத்தம் 130 பேருக்கு தலா 2 கிராம் தங்கக்காசு பரிசாக வழங்கி இருக்கிறார். அவர் செய்த இந்த நற்செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com