கமலுக்கும் விஜய்க்கும் என்ன சலசலப்பு? தளபதி 67இல் கமல் இல்லையா?

கமலுக்கும் விஜய்க்கும் என்ன சலசலப்பு? தளபதி 67இல் கமல் இல்லையா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன், பகத்பாசில், விஜய்சேதுபதி ஆகியோர் நடித்து வெளியான விக்ரம் படம் மெகாஹிட் ஆனது. இந்த படத்திற்கு அடுத்து விஜய் கதாநாயகனாக தளபதி 67 என்ற படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ்.

இந்த படத்தில் சஞ்சய் தத், மிஷ்கின், கவுதம் மேனன், அர்ஜூன், சாண்டி மாஸ்டர்,  திரிஷா, ஆகியோர் பட்டியலை வெளியிட்ட படக்குழு தற்போது காஷ்மீரில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க | ‘கேப்டன்’ திருமண நாளுக்கு குவியும் வாழ்த்துகள்...

இதற்கு இடையில் விஜய்க்கும் கமலஹாசனுக்கும் இடையில் பனிப்போர் உண்டானதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அதாவது, தளபதி 67 படத்தில் கமலஹாசன் ஒரு கேமியோ ரோலை ஏற்க இருந்தார் என தகவல்கள் கூறுகின்றன.

ஆனால் கமலஹாசன் அடுத்து தயாரிக்கும் படத்திற்கு விஜயிடம் கால்ஷீட் கேட்டதாகவும், ஆனால் விஜய் சரியாக பதிலளிக்காததால் கமலஹாசன் கவலை ஆனதாக கூறப்படுகிறது.

இதனால்தான், லோகேஷ் இயக்கும் இந்த படத்தில் கேமியோ ரோலில் நடிக்க இருந்ததை வேண்டாம் என மறுத்ததாக சினிமா வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | குழந்தையை உலகத்திற்கு அறிமுகப்படுத்திய பிரியங்கா சோப்ரா...