மன்சூர் அலிகானுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம்...!

நடிகை த்ரிஷா உள்ளிட்ட நடிகைகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் மன்சூர் அலிகானுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

லியோ படத்தில் நடித்த த்ரிஷா குறித்து மிகவும் சர்ச்சையான கருத்துகளை தெரிவித்ததால் நடிகர் மன்சூர் அலிகானின் கருத்துக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், சக நடிகர்களைப் பற்றி நகைச்சுவை என்ற பெயரில் தரக்குறைவாக பேசிய மன்சூர் அலிகானை வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும் எந்த ஊடகம் முன்பு அவர் பேசினாரோ, அந்த ஊடகம் முன்பு உண்மை மனதுடன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டுகிறோம் என்றும் வலியுறுத்தி உள்ளது. 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com