ஜெயிலர்
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படம் ரசிகர்களிடையே சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியதையடுத்து இயக்குநர் நெல்சனின் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிப்பாரா? மாட்டாரா? என்ற கேள்வி எழுந்தது ஆனால் அதற்கு பதில் அளிக்கும் வகையில் ஜெயிலர் படத்தின் படபிடிப்பு விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கிறது. இதனையடுத்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இத்திரைப்படம் இந்த ஆண்டு சம்மருக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாரிசும் துணிவும்
தற்போது தமிழ்நாட்டைப் பொறுத்த வரை பரப்பரப்பாக பேசப்பட்டு வருவது வாரிசு மற்றும் துணிவு படத்தை சார்ந்த செய்திகள் தான். கடந்த சில மாதங்களாக இருப்படங்களின் அப்டெட்களும் தொடர்ந்து வந்த வண்ணமுள்ளன. ரஞ்சிதமே.. ரஞ்சிதமே என்று நடிகர் விஜயின் குரலில் வாரிசு படத்தின் முதல் சிங்கிளை அப்படக்குழு வெளியிட்டது. அதனை தொடர்ந்து துணிவு படத்தில் இருந்து சில்லா சில்லா என்றப் பாடலை வெளியிட்டனர் அப்படக்குழுவினர்.
தற்போது துணிவு படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளதை தொடர்ந்து வாரிசு படத்தின் ட்ரெய்லருக்காக ஏக்கத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர் விஜய் ரசிகர்கள். வாரிசு மற்றும் துணிவு வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில் தலையா? தளபதியா? என்று மோதிப்பார்க்க வெறித்தனத்தோடு காத்துக் கொண்டிருக்கின்றனர் விஜய் - அஜித் ரசிகர்கள்.
பி.எஸ் - 2
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி கடந்த 2022ல் வெளியானது PS-1. படம் சியான் விக்ரம், ஜெயம் ரவி மற்றும் கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் மற்றும் பல பிரபலங்களின் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் 2ம் பாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதி திரைக்கு வரும் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு படக்குழுவினர் அறிவித்தனர். முதல் பாகம் 500 கோடி வசூலை ஈட்டிய நிலையில், பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகமும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியன் 2
1996 ஆம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து வெளிவந்த திரைப்படம் தான் இந்தியன். கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிக் கொண்டு வருகிறது. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படம் இந்த ஆண்டு திட்டமிட்டப்படி வெளியானால் கமல்ஹாசன் நடித்த படங்களில் அதிக வசூல் ஈட்டிய படங்களின் பட்டியலில் இப்படமும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.