மூன்று வெற்றிப்பட இயக்குனர்களை போட்டோ எடுத்த தளபதி விஜய்!! இணையத்தில் செம வைரல்

மூன்று வெற்றிப்பட இயக்குனர்களை போட்டோ எடுத்த தளபதி விஜய்!! இணையத்தில் செம வைரல்
Published on
Updated on
1 min read

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனரான லோகேஷ் கனகராஜ் ‘மாநகரம்’ படம் மூலம் தமிழில் இயக்குனராக  பிரபலமானவர். இவர் அடுத்தடுத்து நடிகர் கார்த்தியை வைத்து கைதி, நடிகர் விஜய்யை வைத்து ‘மாஸ்டர்’ என்று தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்தார்.

இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் சற்றுமுன்  புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது  இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்படி என்னதான் அந்த புகைப்படத்துல இருக்குதுன்னு போய் பார்த்த நடிகர் விஜய்யை வைத்து தொடர் ஹிட் படங்களை கொடுத்து வந்த 3 இயக்குனர்களும் இணைந்து எடுத்த புகைப்படம் தான் அது.

விஜய்யின் தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய திரைப்படங்களை இயக்கிய அட்லி, விஜய்யின் ’மாஸ்டர்’ திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் நடித்து முடித்துள்ள ’பீஸ்ட்’ திரைப்படத்தை இயக்கி உள்ள நெல்சன் ஆகிய மூவரும் இணைந்த புகைப்படம் ஒன்றை தான் லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்துல அப்படி என்னதான் சிறப்பு இருக்குதுன்னு  யோசிச்சு பார்த்தா அந்த போட்டோவ எடுத்தது நம்ம தளபதி விஜய் தானாம். 

அதனால் தான் இந்த புகைப்படம் இணையத்தில் வேற லெவலில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் விஜய்க்கு வெற்றி படங்களை கொடுத்த மூன்று இயக்குனர்களுக்கும் தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Picture courtesy @actorvijay
logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com