ஓராண்டு கடந்த ‘மாநாடு’... துள்ளி குதித்து கொண்டாடும் ரசிகர்கள்...

‘மாநாடு’ படம் வெளியாகி இன்றோடு ஓராண்டு கடந்ததை அடுத்து ரசிகர்கள் படு குஷியில் துள்ளி குதித்து கொண்டாடி வருகின்றனர்.
ஓராண்டு கடந்த ‘மாநாடு’... துள்ளி குதித்து கொண்டாடும் ரசிகர்கள்...

பல வகையான சர்ச்சைகள், பல வகையான எதிர்ப்புகளைத் தாண்டி நடிகர் சிம்புவின் ஒரு படம், வெறித்தனமான ரசிகர் கூட்டத்தை அதிகரித்துக் கொடுத்தது. அந்த படம் தான் ‘மாநாடு’. மிகவும்  வித்தியாசமான ஒரு கதை களத்தில் உருவான இந்த டைம் லூப் படமானது, முன்பு இருந்த சிம்புவின் எதிர்ப்பு தெரிவிக்கும் ரசிகர்களின் எண்ணிக்கையை விட, அவரை ஆதரிக்கும் ரசிகர் கூட்டத்தின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொடுத்தது என்று தான் கூற வேண்டும்.

கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் குறைந்த பார்வையாளர்களுடன் வெளியான இந்த் அ’மாநாடு’ படம், த்டீரென ரசிகர்களின் வரவேற்பால் மட்டுமே பெரும் வெற்றிப் பெற்றது. இந்த நிலையில், இந்த படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதத்தில், ரசிகர்கள், படத்தின் ஓராண்டிற்கான ஹாஷ்டாகை சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com