சமூகநீதி பற்றி பேசினால் தான் மக்களிடம் நெருங்கமுடியுங்கிற நிலை வந்து உள்ளது என பா.ரஞ்சித் தொிவித்துள்ளாா்.
கோவை மாவட்டம், அவிநாசி சாலையில் மார்கழியில் மக்களிசை என்ற இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் நாட்டுப்புற இசை உள்ளிட்ட பல்வேறு இசை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. இதனை திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
பின்னர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவா், ஒதுக்கப்பட்ட இசை கலைஞர்களை மக்களிடம் கொண்டு செல்லும் நிகழ்வாக இது அமைந்து இருக்கிறது என்றும், சமூகநீதி பற்றி பேசினால் தான் மக்களிடம் நெருங்க முடியுங்கிற நிலை வந்து விட்டதாகவும் தொிவித்தாா்.