தமிழக அரசால் தனி ஓடிடி தளம் உருவாக்க வேண்டும்..! நடுத்தர பட்ஜெஸ் படங்களுக்கு விடிவு காலம்..!

தமிழக அரசால் தனி ஓடிடி தளம் உருவாக்க வேண்டும்..!

தமிழக அரசால் தனி ஓடிடி தளம் உருவாக்க வேண்டும்..! நடுத்தர பட்ஜெஸ் படங்களுக்கு விடிவு காலம்..!
கொரோனா காலகட்டத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட துறைகளில் சினிமா துறையும் ஒன்று. இதனை நம்பியுள்ள பல லட்சம் தொழிலாளர்கள் மட்டுமின்றி, பல சிறு பட்ஜெட் படங்கள் தியேட்டர்களில் வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நிறைய படங்கள் தேக்கமடைந்துள்ளதால், பலர் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். 
 
இந்த நிலையில், பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் பெரிய ஹீரோக்களின் படங்கள் நேரடியாக அமேசான், நெட்ப்ளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்களில் வெளியாகி வசூலை அள்ளி வருகிறது. இருப்பினும் சிறு, குறு, நடுத்தர பட்ஜெட்டில் உருவான படங்களுக்கு ஓடிடி தளங்களில் பெரியளவில் வரவேற்பு இல்லாததால் பல படங்கள் தேக்கமடைந்துள்ளன. 
இதனை கருத்தில் கொண்டு கேரள அரசு மலையாள சினிமாவுக்கென பிரத்யேகமாக ஓடிடி தளம் ஒன்றை உருவாக்க முடிவெடுத்துள்ளது. இந்த ஓடிடி தளம் வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. 

கேரள அரசின் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள இயக்குநர் சேரன், தமிழ் மொழிக்கும் இதுபோன்று தனி ஓடிடி தளம் அவசியம் எனக் கூறியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், இதுபோன்ற முயற்சி நமது தமிழ் திரைப்படத்துறைக்கும் தமிழக அரசால் உருவாக்கப்பட வேண்டும் எனவும், சிறு முதலீட்டு மற்றும் நடுத்தர பட்ஜெட் படங்களுக்கு இதன் மூலமே விடிவு காலம் என பதிவிட்டுள்ளார். அரசுக்கும் வருமானம் கிடைக்க வாய்ப்பு அதிகம் என தெரிவித்துள்ள அவர்,  தமிழ் மொழிக்கென தனி ஓடிடி தளம் அவசியம் என கூறியுள்ளார். இந்த பதிவை முதலமைச்சர் ஸ்டாலின், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், எம்.எல்.ஏ உதயநிதி ஆகியோருக்கும் டேக் செய்துள்ளார்.