தென்னிந்திய சூப்பர்ஸ்டார்களை சிதைக்க அனுமதிக்கக்கூடாது: நடிகை கங்கனா ரனாவத்தின் சர்ச்சை பதிவு

தென்னிந்திய சூப்பர் ஸ்டார்களை சிதைக்க அனுமதிக்கக்கூடாது என பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தென்னிந்திய சூப்பர்ஸ்டார்களை சிதைக்க அனுமதிக்கக்கூடாது:  நடிகை கங்கனா ரனாவத்தின் சர்ச்சை பதிவு

தென்னிந்திய நடிகர்களுக்கும் தென்னிந்திய படங்களுக்கும் பாலிவுட்டில் பெரிய அளவில் மரியாதை கிடைப்பதில்லை என்று கூறப்பட்டு வரும் நிலையில் நடிகை கங்கனா ரனவத் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இது குறித்து கூறியிருக்கிறார்.

அதில் தென்னிந்திய சூப்பர் ஸ்டார்கள் மற்றும் தென்னிந்திய திரைப்படங்களின் கதையை சிதைக்க ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. தென்னிந்திய சூப்பர் ஸ்டார்கள் இந்திய கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றியதால், அவர்கள் தங்கள் குடும்பங்களை மிகவும் நேசிக்கிறார்கள் மற்றும் அவருடைய உறவுகள் மேற்கத்தியமயமாகப்படவில்லை.

மேலும் தென்னிந்திய சூப்பர் ஸ்டார்களின் தொழில்முறை மற்றும் ஆர்வம் இணையற்றது. பாலிவுட் திரையுலகம் அவர்களை சிதைக்க அனுமதிக்கக் கூடாது என்று கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து இந்த பதிவில் அவர் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா’ மற்றும் யாஷின் ‘கே.ஜி.எஃப் 2’ படத்தின் ஸ்டில்லையும் குறிப்பிட்டு ஸ்டோரி  நடிகை கங்கனா ரனாவத் பதிவிட்டிருப்பது தற்போது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com