கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் கதாநாயகியாக நடித்து வருபவர் ராஷ்மிகா மந்தனா. ‘சுல்தான்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார் ராஷ்மிகா.
அந்த வகையில் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ் திரிபாதி என்ற ரசிகர், ராஷ்மிகாவின் சொந்த ஊருக்குச் சென்று அவரை நேரில் சந்திக்க முடிவு செய்தார்.
இதற்காக அவர் தெலுங்கானாவில் இருந்து சாலை மார்க்கமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள ராஷ்மிகாவின் சொந்த ஊரான குடகு மாவட்டத்தை நோக்கி புறப்பட்டார்.மும்பையில் படப்பிடிப்பில் இருந்த நடிகை ராஷ்மிகாவுக்கு இந்த தகவல் தெரியவந்தது.
தற்போது நடிகை ரஷ்மிகா ரசிகர்கள் இவ்வாறு நீண்ட தூரம் பயணம் செய்து வருவது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்." மக்களே உங்களில் சிலர் என்னை காண்பதற்காக நீண்ட தூரம் பிரயாணம் செய்து வருவதாகவும், என்னைக் காண என் வீட்டிற்குச் செல்வதாகவும் தெரிய வந்தது.
தயவு செய்து அப்படியே யாரும் செய்யாதீர்கள். இவ்வளவு தூரம் பயணம் செய்து வரும் உங்களை என்னால் பார்க்க முடியவில்லை என்னும் போது எனக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. நான் உங்களை ஒரு நாள் கட்டாயமாக சந்திப்பேன் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது. ஆனால் தற்போதைக்கு சமூக வலைத்தளங்களில் மட்டும் உங்கள் அன்பை காண்பியுங்கள். நான் உற்சாகமாக இருப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.