
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் ரெஜினா கசான்ட்ரா. இவர் திரைப்படங்கள், சீரிஸ், விளம்பரங்கள் என நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை ரெஜினா 'விஸ்கி' ஒன்றிற்கான விளம்பரம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். மேலும், “9 வயதில் தொகுப்பாளராக வந்து, பின்னர் விளம்பரப்படங்களில் நடித்து சினிமாவுக்குள் வந்தேன்.
எனது வாழ்க்கையில் இந்தப் பயணம் ஒரு பொக்கிஷம்,” எனக் குறிப்பிட்டு விஸ்கி குறித்து ரொம்ப பெருமையாக தனது பதிவில் பேசியுள்ளார் .