ரியாலிட்டி ஷோ மூலம் புகழடைந்த நடன இயக்குநர் சாண்டி நடிப்பில் உருவாகியுள்ள 3:33 படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
திரைப்படங்களில் நடன இயக்குநராக பணியாற்றி வரும் சாண்டி, கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற ரியாலிட்டி ஷோ மூலம் மிகவும் பிரபலமடைந்தார். இந்த நிலையில், 3:33 என்ற படத்தில் முன்னனி கதாபாத்திரத்தில் சாண்டி, இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், ரேஷ்மா, சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
நம்பிக்கை சந்த்ரு என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஹர்ஷவர்தன் இசையமைத்துள்ளார். தற்போது இந்தப் படத்தின் டீசர் வெளியாகி அனைவரிடத்திலும் வரவேற்பை பெற்றுள்ளது. நேரம் மனிதனை எப்படி சித்ரவதை செய்து கொலை செய்கிறது என்பதை மையமாக வைத்து இந்த டீசர் வெளியாகியுள்ளது. ஒரு த்ரில்லர் கலந்த பேய் படமாக 3:33 இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.