விஜய் சேதுபதியுடன் மோதும் சந்தானம்..! விநாயகர் சதுர்த்தி அன்று நடைபெறும் போட்டி..!

ஓடிடியா? தொலைக்காட்சியா? வெல்லப்போவது யார்?

விஜய் சேதுபதியுடன் மோதும் சந்தானம்..! விநாயகர் சதுர்த்தி அன்று நடைபெறும் போட்டி..!

நகைச்சுவை நடிகராக இருந்து ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் சந்தானம். தனது சென்ஸ் ஆஃப் ஹீமரால் ரசிகர்கள் மத்தியில் அழிக்க முடியாத இடம் பிடித்தவர். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்றப் படத்தின் மூலம் முழு நேர ஹீரோவாக களம் இறங்கிய சந்தானம், அதன் பிறகு காமெடி மட்டுமின்றி, திரில்லர், ஆக்‌ஷன், செண்டிமெண்ட் என அனைத்து விதமான படங்களிலும் நடித்து வருகிறார். 

அந்த வரிசையில், தற்போது அவரது அடுத்தப் படமான டிக்கிலோனா படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கார்த்திக் யோகி இயக்கியுள்ள இந்தப் படத்தில், சந்தானம் மூன்று வேடங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக அனகா மற்றும் ஷிரின் ஆகியோர் நடித்திருக்கின்றனர். பிரபல சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. 

இந்த நிலையில், இப்படம் செப்டம்பர் 10-ம் தேதி விநாயகர் சதுர்ச்சியன்று நேரடியாக ஜீ-5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சந்தானம் நடித்துள்ள படம் நேரடியாக ஓடிடியில் ரிலீசாவது இதுவே முதன் முறையாகும். இதில் ஒரு ட்விஸ்ட் என்னவென்றால், சந்தானத்தின் டிக்கிலோனா படம் ரிலீசாகும் அதே நாள், நடிகர் விஜய்சேதுபதியின் துக்ளக் தர்பார் படமும் வெளியிடவுள்ளதாக படக்குழுவினர் கூறியிருக்கின்றனர். இப்படம் நேரடியாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படவுள்ளது. நடிகர் சந்தானமும், விஜய்சேதுபதியும் முதன்முதலாக திரையில் மோதவுள்ளது இதுவே முதன்முறையாகும்.