வெளியானது டி.எஸ்.பி ட்ரெயிலர்... குவியும் ரசிகர்கள் வாழ்த்துக்கள்...

வெளியானது டி.எஸ்.பி ட்ரெயிலர்... குவியும் ரசிகர்கள் வாழ்த்துக்கள்...

Published on

விஜய் சேதுபதியின் அதிரடி திரில்லர் படமான டிஎஸ்பி திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. பொன்ராம் இயக்கத்தில் வெளியாக இருக்கும் டிஎஸ்பி திரைப்படம் விஜய் சேதுபதிக்கு 46-வது படமாகும். அப்படத்தில் 2018 இன் ஃபெமினா மிஸ் இந்தியா வென்ற அனுகீர்த்தி வாஸ் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்நிலையில் நவம்பர் 11 ஆம் தேதி படத்தின் முதல் போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து, இன்று படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் திரைப்படம் டிசம்பர் 2 ஆம் தேதி வெளியிடப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com