’அன்னபூரணி’ படத்தில் பாடிய சூப்பர் சிங்கர் ஜூனியர் இறுதிப் போட்டியாளர்கள்...!

Published on
Updated on
1 min read

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி இறுதிப்போட்டிக்கு தேர்வான போட்டியாளர்களை நயன்தாராவின் அன்னபூரணி படத்தில் பாடல் பட வைத்து இசையமைப்பாளர் தமன் அசத்தியுள்ளார்.

கோலாகலமாக நடந்து வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் 9 வது சீசன் நிகழ்ச்சி,  தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஃபைனலில் கலந்துகொள்ள, தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்கள் அறிவிக்கப்பட்டதோடு, நயன்தாரா நடித்திருக்கும் அன்னபூரணி படத்தில் சூப்பர் சிங்கர் ஜூனியர் திறமையாளர்கள் பாடிய  பாடல் இந்த வார நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. 

தமிழின் முன்னணி தனியார் தொலைக்காட்சியில்,  பல வருடங்களாக வெற்றி நடை போட்டு வருகிற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி,  தமிழ் இசை உலகில் மிகப்பெரும்  மாற்றத்தை  ஏற்படுத்தி வருகிறது. இந்நிகழ்ச்சி மூலம் அறிமுகமான திறமையாளர்கள்,  சங்கீதத்தின் அனைத்துத் துறைகளிலும் கோலோச்சி வருகிறார்கள். தமிழ்த்திரையுலகிலும்  பாடகர்களாக சூப்பர் சிங்கர் பாடகர்கள் ஜொலித்து வருகின்றனர்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சீனியர், ஜூனியர்  என இரு பிரிவுகளாக இளைஞர்களுக்கும்,சிறு வயதினருக்குமாக நடைபெறுகிறது.  தற்போது சிறுவர்களுக்கான ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 9 வது சீசன் கோலாகலமாக நடந்து வந்த நிலையில், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப்போட்டியில் கலந்துகொள்ளக் கூடிய போட்டியாளர்களின் பெயர்கள் இந்த வாரம் சின்ன சர்ப்ரைஸுடன் அறிவிக்கப்பட்டது. 

இறுதிக்கட்டத்தை எட்டும் பாடகர்களுக்கு திரையில் வாய்ப்புகளை தருவதாக, இசையமைப்பாளர் தமன் வாக்குறுதி தந்திருந்த  நிலையில்,  இறுதிக்கட்டப் போட்டியாளர்கள் விரைவில் நயன்தாரா நடிப்பில் வெளிவரவிருக்கும் அன்னபூரணி படத்தில் ஒரு அழகான பாடலைப் பாடியுள்ளனர். 

முன்னதாக இறுதிப்போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த ஶ்ரீநிதா ஷிவாத்மிகா, ஹர்ஷினி, கோகுல்  ஆகிய நால்வரும்  இணைந்து அன்னபூரணி படப்பாடாலைப் பாடியுள்ளனர். இவ்வார நிகழ்ச்சியில் சூப்பர் சிங்கர் திறமையாளர்கள் பாடிய அன்னபூரணி பாடல் அறிமுகப்படுத்தப்பட்டது,  போட்டியாளர்களை மேலும் உற்சாகப்படுத்தியது. 

முந்தைய நிகழ்ச்சிகளை விட இந்த முறை நடைபெற்று வரும் சூப்பர் சிங்கர்  நிகழ்ச்சியில் பல அற்புதமான நிகழ்வுகள் நடந்து வருகின்றது.  நடுவராக கலந்துகொண்டுள்ள இசையமைப்பாளர் தமன் பாடகர்களோடு உற்சாகமாக கலந்துரையாடியதோடு, பலரின் வாழ்வை மாற்றும் வகையிலான வாய்ப்புகளையும் வழங்கி வருகிறார். 

மிமிக்ரியில் கலக்கிய, எளிமையான குடும்பத்தைச்சேர்ந்த சிறுமி ஹர்ஷினி நேத்ரா, கானாவில் கலக்கிய கலர்வெடி கோகுல் என பாடகர்களை உற்சாகப்படுத்திய தமன், நிகழ்ச்சியின் நடுவர் ஆண்டனி தாசனுக்கும் ஒரு பாடல் வாய்ப்பு தந்து அசத்தியுள்ளார் தமன்.   

மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திறமையாளர்கள் அனைவருக்கும் திரைப்பட பாடல் வாய்ப்பு தருவதாகவும் உறுதியளித்துள்ளார் தமன். இசையமைப்பாளர் தமனின் நெகிழ்ச்சியான செயல்கள் பார்வையாளர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com