
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் ஆவார். இவர் தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் அவரின் 41-வது படத்தில் நடித்து வருகிறார்.
அப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன், சுதா கொங்கரா என அடுத்தடுத்த படங்களில் சூர்யா பிஸியாக நடிக்கவுள்ளார். இந்நிலையில் சூர்யாவின் மகன் தேவ் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் உடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
அந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் தேவ் திரைப்படத்தில் அறிமுகமாக இருக்கிறாரா? அல்லது வேறு எதாவது விஷயமா என குழம்பியுள்ளனர்.