காஜல் அகர்வால் நடிக்கயிருந்த வேடத்தில் தமன்னா.!! 

காஜல் அகர்வால் நடிக்கயிருந்த வேடத்தில் தமன்னா.!! 

கடந்த ஆண்டு கெளதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால், அதன்பிறகும் தான் கமிட்டாகியிருந்த ஆச்சார்யா உள்ளிட்ட சில படங்களில் நடித்து வந்தார். 

அதோடு, நாகார்ஜூனாவின் கோஸ்ட் படத்திலும் நடிக்க தயாரானார். ஆனால் தனிப்பட்ட காரணகளால் அப்படத்திலிருந்து விலகினார் காஜல்.

அதன்பிறகு கோஸ்ட் படத்தில் காஜலுக்கு பதில் இலியானா நடிப்பதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் தற்போது அந்த படத்தில் தமன்னாவை நடிக்க வைக்க போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

இதுதவிர அஜித்தின் வேதாளம் ரீமேக்கான போலா சங்கர் படத்திலும் சிரஞ்சீவிக்கு ஜோடியாக தமிழில் ஸ்ருதிஹாசன் நடித்த வேடத்தில் நடிக்க தமன்னா கமிட்டாகியிருக்கிறார்.