மீண்டும் சர்ச்சைக்கு சோறு போட்ட நடன இயக்குனர்...! பிரபுதேவாவுக்கு பெண் குழந்தையா...?

மீண்டும் சர்ச்சைக்கு சோறு போட்ட நடன இயக்குனர்...!  பிரபுதேவாவுக்கு பெண் குழந்தையா...?


தமிழ்த்திரையுலகில்  முன்னணி நடன இயக்குனராக புகழ்பெற்றவரும் நடிகரும், இயக்குனருமான பிரபுதேவா சமீப காலகங்களாகவே பல சர்ச்சைக்கு  ஆளாகியிருந்தார்.

ரமலத் என்ற பெண்ணை முன்னதாக திருமணம் செய்து இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில்  சமீபமாக தமிழில் முன்னணி நடிகையாக வலம்வந்த நயன்தாராவும் பிரபுதேவாவும் காதல் வயப்பட்டு இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இதன் காரணமாக தனது முதல் மனைவியை விவாகரத்தும் செய்தார் பிரபுதேவா.

 அதன் பின்னர், நயன்தாராவுக்கும் பிரவுதேவாவுக்கும் இடையே சில கருது வேறுபாடுகள் ஏற்பட்ட அவர்களும் பிரிந்தனர். இவர்கள் லிவிங் டுகெதர் உறவில் வாழ்ந்து வந்த போதும், பின்னர் பிரிந்த போதும் பலவாரியான சர்ச்சைகள் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது. 

 இவ்வாறிருக்க சில மாதங்களுக்கு  முன்பு பிரபுதேவா தனது சமூக வலைத்தளங்களில் ஒரு பெண்ணோடு பல இடங்களுக்கு சுற்றுலா சென்று அங்கு எடுத்த புகைப்படங்கள் வெளியாக மீண்டும் சர்ச்சைக்கு சோறு போட்டார்.  இது குறித்து சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கள் எழத்தொடங்கின. நயன்தாராவோடு கிசுகிசுக்கப்பட்ட பிரபுதேவா மீண்டும் ஒரு பெண்ணோடு லிவிங் டுகெதர் உறவில் இருக்கிறாரா என விமர்சனங்கள் வெளியாகின.

இந்த நிலையில், நடிகர் பிரபுதேவா ஹிமானி சிங் எனும் பிசியோதெரபிஸ்டை ரகசியத் திருமணம் செய்துகொண்டதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளியாகிவந்த நிலையில்,  ஏப்ரல் மாதம் தன் பிறந்தநாளின் போது அவர் ஹிமானி சிங் உடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தரிசனம் செய்ய வருகை தந்து கிசுகிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 


அதோடு, தனது கடந்த காலங்களில் இருந்த கசப்புகள்  நீங்கி தற்போது ஹிமானி சிங் -உடன் தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், தனது மகனுடன் சந்தோஷமாக இருக்கும் ஒரு புகைப்படத்தையும்  வெளியிட்டிருந்தார்.   

இந்நிலையில், பிரபுதேவாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாகவும், அந்த மகிழ்ச்சியில் தான் திருப்பதி கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்ததாகவும் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com