கேண்டிடாக மாஸ் காட்டும் 'தி லெஜெண்ட் சரவண அருள்' போட்டோக்கள்:

தி லெஜெண்ட் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் சரவண அருள்-இன் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேண்டிடாக மாஸ் காட்டும் 'தி லெஜெண்ட் சரவண அருள்' போட்டோக்கள்:

கடந்த ஜூலை 28ம் தேதி திரையரங்குகளில் வெஇயான தி லெஜெண்ட் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, லெஜெண்ட் சரவணனுக்கு, வாழ்த்துகள் குவிந்து வருகின்றது.

தி லெஜெண்ட் திரைப்படம்:

பிரபல இயக்குனர்கள் ஜேடி ஜெர்ரி இயக்கத்தில், தி லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் தயாரிப்பில், கோபுரம் பிக்சர்ஸ் வெளியிட்ட படம் தான் தி லெஜெண்ட். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் சுமார் 2500 தியேட்டர்களுக்கும் மேல் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.

பிரம்மாண்டப் படக்குழு:

இந்த படத்தின் மாசான பாடல்களை, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து, வைரமுத்து, மதன் கார்க்கி, பா.விஜய், கபிலன், சினேகன் போன்ற பிரபல பாடலாசிரியர்கள் பாடல் எழுதியிருக்கிறார்கள். மேலும், நடன இயக்குனர்களாக, ராஜு சுந்தரம், பிருந்தா, தினேஷ் போன்றவர்களும், ஸ்டண்ட்சுக்கு அனல் அரசும் இணைந்து, பிரம்மாண்ட படக்குழு கொண்டு இந்த படத்தை உருவாகி உள்ளது.

துபாய் விசிட்:

இந்நிலையில், துபாயில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தி லெஜெண்ட் சரவண அருள், டிப் டாப்பாக வந்திருந்தார். aப்போது எடுத்த பல காண்டிடான போட்டோக்களில், படு மாசாக இருக்கிறார் சரவணன். தனது போட்டோக்களை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டதைத் தொடர்ந்து, ரசிகர்கள் அதனை அதிகமாகப் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com