உயிர், பணம், அதிகாரத்துக்கு இடையிலான போராட்டம்... வெளியாகிறது ‘ஆர் யா பார்’ வெப்சீரியஸ்...

அதிகாரவர்க்கத்தின் பணத்தாசைக்கு எதிராக உயிருக்காக போராடும் ‘ஆர் யா பார்’ இணையத்தொடர் இன்று வெளியாகி நல்ல வரவேற்புப் பெற்று வருகிறது.
உயிர், பணம், அதிகாரத்துக்கு இடையிலான போராட்டம்... வெளியாகிறது ‘ஆர் யா பார்’ வெப்சீரியஸ்...

பணக்காற வர்க்கத்தினரின் பணத்தாசைக்காக சூரையாடப்படும் தனது பழங்குடியின மக்களின் வாழ்வை பாதுகாக்க ஒரு பழங்குடியின மனிதன் தனது காட்டை விட்டு வெளியேறி செய்யும் சாகசங்களை விவரிக்கிறது ‘ஆர் யா பார்’ என்ற வெப்சீரியஸ்.

ஆக்‌ஷன்- கலந்த டிராமா தொடரான ‘ஆர் யா பார்’ சித்தார்த் சென்குப்தா இயக்கத்தில், Edgestorm Ventures LLP சார்பில் ஜோதி சாகர் மற்றும் சித்தார்த் சென்குப்தா தயாரிப்பில் உருவாகியுள்ளது. க்ளென் பரெட்டோ, அங்குஷ் மொஹ்லா மற்றும் நீல் குஹா ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள இந்தத் தொடர் இன்று டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் தமிழ், இந்தி, தெலுங்கு, மராத்தி, கன்னடம், பெங்காலி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியது.

இந்த படத்தில் கதாநாயகனாக சர்ஜூ என்ற பெயரில் நடித்திருக்கும் ஆதித்யா ராவல், வில்வித்தையில் சிறந்து விளங்குகிறார். வஞ்சகமும் ஊழலும் மிகுந்த அரசியல்வாதிகள் சூழ்ந்த நவீன உலகில், பெரும் குற்றங்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்திய கூலிப்படை கொலையாளியாக மாறி, தான் சார்ந்த பழங்குடியினரின் உயிர்வாழ்விற்காக போராடுகிறார்.

ஆதித்யா ராவல், பத்ரலேகா, சுமீத் வியாஸ், ஆஷிஷ் வித்யார்த்தி, திப்யேந்து பட்டாச்சார்யா, ஆசிப் ஷேக், ஷில்பா சுக்லா, வருண் பகத், நகுல் சேதேவ் மற்றும் பலர் இணைந்து உருவாக்கியுள்ள இந்த வெப் சீரியஸ் மக்களிடம் நல்ல வரவேற்புப் பெற்று வருகிறது.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் தயாரிப்பாளருமான சித்தார்த் சென்குப்தா கூறுகையில்..,

இரண்டு வெவ்வேறு உலகங்கள் ஒன்றாக கலக்கும் போது, அவைகளுக்குள் அடிக்கடி மோதலும் குழப்பமும் ஏற்படும். பேராசை மிகுந்த அதிகார உலகில் ஒரு இனம் உயிர்வாழப் போராடும் கதையை இந்த தொடர் கூறுகிறது. அட்டகாசமான திரைக்கதை அருமையான நடிகர்கள், பரபரப்பான திருப்பங்கள் என ரசிகர்களை மகிழ்விக்கும் அனைத்தும் இத்தொடரில் உள்ளது. உலகம் முழுக்க பிரபலமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் எங்கள் ஆர் யா பார் உலகை உலகளாவிய அளவில் பார்வையாளர்களிடம் கொண்டு செல்லும் என்பது பெருமகிழ்ச்சி.

நடிகர் ஆதித்யா ராவல் கூறுகையில்..,

சர்ஜு எனும் அழகான பாத்திரத்தில் நான் நடித்துள்ளேன். சர்ஜு தனது நிலத்தையும் மக்களையும் பாதுகாக்க விரும்புகிறார், மேலும் தனது இலக்கை நிறைவேற்ற எந்த எல்லைக்கும் செல்வார். ஒன்றின் பின் ஒன்றாக பல சவால்களை சமாளிக்கும் போது இக்கதாபாத்திரத்தின் வெவ்வேறு சாயல்களை நீங்கள் காணலாம். ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் தொடரான “ஆர் யா பார்” தொடரில் சர்ஜுவாக நடிக்க எனக்கு வாய்ப்பளித்த சித்தார்த் சென்குப்தா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆகியோருக்கு நன்றி.

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த வெப்சீரியஸ், நடிப்பு உருவாக்கம் என அனைத்து வகையிலும் மக்கள் மனதை கவரும் வண்ணம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com