என்னை பற்றி யாராவது சொன்ன நான் இப்படி தான் பண்ணுவேன்....  ஹூமா குரேஷி

ரஜினியின் காலா படத்தைத்தொடர்ந்து  ஹுமா குரேஷி, தமிழ்,  இந்தி,  மலையாளம் மற்றும் ஆங்கில மொழி படங்களிலும்  நடித்து வருகிறார். 
என்னை பற்றி யாராவது சொன்ன நான் இப்படி தான் பண்ணுவேன்....  ஹூமா குரேஷி
Published on
Updated on
1 min read

தற்போது இந்தியில் அக்‌ஷய் குமாரின் 'பெல் பாட்டம்' படத்திலும்,தமிழில்  அஜித்தின் வலிமை படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

ஒரு நடிகையாக இருப்பதால் சமூக வலைதளங்களில் தான் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகள் குறித்து ஹுமா குரேஷி கூறியதாவது,

பிரபல நடிகையாக  இருப்பதால், தொடர்ந்து எதிர்மறையாக விமர்சனங்கள் ,கருத்துக்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது. 

அப்படி உருவாகும் கருத்துக்களை எவ்வாறு கையாள்வது என்பதை கற்றுக்கொண்டேன்  சமூகவலைத்தளத்தில் ஒவ்வொரு கருத்தையும் நான் உட்கார்ந்து படிப்பதில்லை. நான் சொல்ல விரும்புவதை நான் சொல்வேன். மற்றவர்களின் கருத்தைப்பற்றி எனக்கு கவலை இல்லை.

மனிதனின் மனம் எளிதில் பாதிக்கப்படுகிறது, ஒருவருக்கு 100 பாராட்டுக்கள் வரும் போது, ஒரு நபர் எதிர்மறையான ஒன்றைச் சொன்னாலும், நமக்கு வந்த அனைத்து பாராட்டுக்களையும் மறந்து ஒரு நெகட்டிவ் கருத்தில் கவனம் செலுத்தி வேதனை அடைவோம்.

ஆனால் நான் எனக்கு வரும் எதிர்மறை கருத்தில் கவனம் செலுத்துவதை விட கிடைத்த எல்லை இல்லா அன்பில் கவனம் செலுத்துவேன் என்று கூறியுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com