கொட்டும் மழையிலும் தாவரவியல் பூங்காவை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்!
வார விடுமுறை ஞாயிற்றுக்கிழமையான இன்று உதகை அரசு தாவரவியல் பூங்காவில் கொட்டும் மழையிலும் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பிற்பகல் முதல் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் வார விடுமுறையான இன்று உதகை அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனை அடுத்து காலை முதல் மேகமூட்டத்துடன் கூடிய காலநிலை நிலவி வந்த நிலையில் பிற்பகல் முதல் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்தது.
குறிப்பாக அரசு தாவரவியல் பூங்காவில் கொட்டும் மழையில் பூங்காவை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.