உதயநிதி ஸ்டாலின் அரசியல் பயணத்தை தொடங்கிய பின்பு வெளியாகும் முதல் படம் "நெஞ்சுக்கு நீதி" ஆகும். இது அருண் ராஜா காமராஜ் இயக்கிய இரண்டாவது படம் என்ற நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. டீசர் பார்வையாளர்களை மிரட்டும் விதமாகவும் சுவாரசியமாகவும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த படம் இந்தியாவில் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனா ஆர்டிகள்15 என்ற ஹிந்தி படத்தில் ரீமேக் என்பதால் இதை குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ஆர்டிகள்15 படம் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த மக்களின் அவலங்களை உடைக்கும்படியாக அமைந்து இருந்தது. அதே போல இப்பொழுது தமிழில் வெளியாக போகும் இந்த நெஞ்சுக்கு நீதி படத்தின் மூலம் உதயநிதி ஒரு புதிய அஸ்திவாரத்தை மக்கள் மனதில் அமைக்க போகிறார் என எதிர்பார்க்கபடுகிறது.
அந்த டீசரில் "ஒருத்தன் நல்லவனா இருக்கிறதும், கெட்டவனா இருக்கிறதும் சாதியால இல்ல சார் அவனுக்குள்ள இருக்கிற குணத்துலதான் சார் இருக்கு..." என்று கண்ணீரோடு சொல்லப்படும் வசனம் பார்வையாளர்களை ஈர்க்கும் வண்ணம் இருக்கிறது.
உதயநிதி ஸ்டாலினின் நிமிர்,மனிதன்,சைக்கோ பட வரிசையில் இதுவும் ஒரு நல்ல ஹிட் கொடுக்கும் என எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியலில் அவர் அரியணைக்கு பலம் சேர்க்கவே இதுபோன்ற கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதாக பலராலும் பேசப்பட்டு வருகிறது.
இதில் நீதிக்காக போராடும் போலீஸ் ஆஃபீசர் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் உதயநிதி. இதன் மூலம் தன் சினிமா வாழ்க்கையில் மட்டுமல்லாமல் அரசியல் வாழ்க்கையிலும் தாழ்த்தப்பட்ட மக்களின் அவலங்களை உடைப்பார் என பலரும் அவர்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுகின்றனர்.