2005ம் ஆண்டு வெளியான சந்திரமுகி படம் அக்காலத்திலேயே படு பயங்கரமாக ஹிட்டானது. ரஜினிகாந்த், ஜோதிகா, பிரபு, நயன்தாரா என பலரும் நடித்த இந்த படம், மலையாள படமான ‘மணிசித்திரத்தாழு’ படத்தின் ரீமேக் தான்.
ஆனாலும், இந்த படமானது மக்களுக்கு மிகவும் பிடித்த படமாக இருந்தது. இயக்குனர் வாசு இயக்கிய இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை வாசுவே இயக்கி வருகிறார்.
பதினெட்டு வருடங்களுக்குப் பிறகு உருவாகியுள்ள இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் மீண்டும் அதே நடிகர்களை நடிக்க விக்க முடியவில்லை என்பதனால், நடிகர் லாரென்ஸ், கங்கனா ரனாவத் நடிக்கின்றனர்.
மேலும் படிக்க | கிங்ஸ்லி மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்...
ஆனால், இந்த படத்தின் சிறப்பு, முதல் பாகத்தில் நடித்த நகைச்சுவை நடிகர் வடிவேலு இரண்டாம் பாகத்திலும் இருப்பது உறிப்பிடத்தக்கது. ஹைதரபாத்தில் முதற்கட்ட படபிடிப்பு முடிந்த நிலையில், அடுத்தக்கட்ட படபிடிப்பு தற்போது நடந்து வரும் நிலையில், நடிகர் வடிவேலு படபிடிப்புக்கு நேரத்திற்கு சரியாக வருவதில்லை என பல வதந்திகள் கிளம்பியுள்ளன.
இதனால் அவர் வரும் காட்சிகளைக் குறித்து படபிடிப்பை தொடர இருப்பதாக தகவல்கள் வெளியாகி சர்ச்சையைக் உருவாக்கி வருகிறது. முதல் பாகத்தில் வடிவேலுவின் காட்சிகளுக்காக பலரும் ஆர்வமாக காத்திருந்த நிலையில், இந்த் அதகவல் ரசிகர்களுக்கு சிறிது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.