ரஷ்யாவில் பைக்குடன் தல அஜித்.. வைரலாகும் வலிமை ஷூட்டிங் ஸ்பாட் ஃபோட்டோ

அஜித் கலந்துகொண்ட படப்பிடிப்பு புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அஜித் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

  ரஷ்யாவில் பைக்குடன் தல அஜித்.. வைரலாகும் வலிமை ஷூட்டிங் ஸ்பாட் ஃபோட்டோ

வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் வலிமை. பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகி வரும் இப்படத்தின்  படப்பிடிப்புகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

முன்னதாக வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் கிட்டத்தட்ட படம் தொடங்கி இரண்டு வருடங்கள் கழித்து கடந்த வாரம் வெளியாகி அஜித் ரசிகர்களை மகிழ்வித்தது. 

வருகின்ற விநாயகர் சதுர்த்திக்கு வலிமை படத்தின் டீசர் வெளியாகும் என தெரிகிறது. அதனைத் தொடர்ந்து ரிலீஸ் தேதியை முடிவு செய்துவிட்டார்களாம்.

ஒரு வாரமாக ரஷ்யாவில் நடைபெற்று வந்த வலிமை படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் மொத்தமாக முடிந்த நிலையில் அங்கே அஜித் கலந்துகொண்ட படப்பிடிப்பு புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அஜித் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.