கேரளாவில் பிரமாண்டமாக வெளியாக உள்ள வலிமை!

வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகிவுள்ள 'வலிமை' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆக உள்ளது.

கேரளாவில் பிரமாண்டமாக வெளியாக உள்ள வலிமை!

வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகிவுள்ள 'வலிமை' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆக உள்ளது.

ஏற்கனவே இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கிவிட்ட நிலையில், சமீபத்தில் இந்த படத்தின் தீம் மியூசிக் வெளியாகி இணையதளங்களை ஸ்தம்பிக்க வைத்தது.

இந்த நிலையில் 'வலிமை' திரைப்படம், கேரள மாநில ரிலீஸ் உரிமை குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. 'வலிமை' படத்தின் கேரள மாநில ரிலீஸ் உரிமையை E4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் பெற்றுள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஜீ ஸ்டுடியோ தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்து உள்ளது.

இதனை அடுத்து கேரளாவில் இந்த படம் மிகப்பெரிய அளவில் பிரமாண்டமாக வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Image