வரும் பிப்ரவரி 17...நேருக்கு நேர் மோதும் தனுஷ் - செல்வராகவன்...!

வரும் பிப்ரவரி 17...நேருக்கு நேர் மோதும் தனுஷ் - செல்வராகவன்...!

நடிகர் தனுஷ் மற்றும் செல்வராகனின் வாத்தி - பகாசூரன் திரைப்படம் ஒரே நாளில் திரையில் மோதவுள்ளன.

நடிகர் தனுஷ் நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வாத்தி’. இப்படத்தில் நடிகர் தனுஷ்க்கு ஜோடியாக சம்யுக்தா மேனனும், சமுத்திரகனி, சாய் குமார், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றூம் பார்ச்சூன்ஃபோர் சினிமாஸ் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 17 ஆம் தேதி திரையில் வெளியாகவுள்ளது. முன்னதாக, இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதேபோல், இயக்குனரும் நடிகருமான செல்வராகவன் நடிப்பில், மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பகாசூரன்’. நட்டி நடராஜ், ராதாரவி, மன்சூர் அலிகான் உள்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் வருகின்ற பிப்ரவரி 17 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் நடிகர் தனுஷின் வாத்தி படமும், செல்வராகவனின் பகாசூரன் திரைப்படமும் ஒரேநாளில் அதாவது பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதன்மூலம் அண்ணன், தம்பிகளான செல்வராகவன் - தனுஷ் இருவரின் திரைப்படமும் முதன்முறையாக ஒரே தேதியில் வெளியாகவுள்ளதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com