பல நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட தி லெஜெண்ட் சரவணனின் தி லெஜெண்ட் திரைப்படம் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு ரசிகர்கள் வெகு ஆர்வமாக காத்து வருகின்றனர்.
தி லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் என்ற பிரபல ஜவுளி சாம்ராஜ்ஜியத்தை நடத்தி வரும், தி லெஜெண்ட் சரவணன், தனது திரைப்பயணத்தை தி லெஜெண்ட் என்ற படம் மூலம், ஹீரோவாக, கோலிவுட்டிற்கு எண்ட்ரி கொடுத்திருக்கிறார்.
ஜேடி, ஜெர்ரி இருவரும் இயக்கி வரும் இந்த படத்தை, தி லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் மாசான பாடல்களை, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து, வைரமுத்து, மதன் கார்க்கி, பா.விஜய், கபிலன், சினேகன் போன்ற பிரபல பாடலாசிரியர்கள் பாடல் எழுதியிருக்கிறார்கள். மேலும், நடன இயக்குனர்களாக, ராஜு சுந்தரம், பிருந்தா, தினேஷ் போன்றவர்களும், ஸ்டண்ட்சுக்கு அனல் அரசும் இணைந்து, பிரம்மாண்ட படக்குழு கொண்டு இந்த படத்தை உருவாகி உள்ளது.
கடந்த மே 29ம் தேதி இந்த படத்தின் ட்ரைலர் வெளியானது. பிரபு, நாசர், தம்பி ராமையா, காளி வெங்கட், விஜயகுமார், மறைந்த நடிகர் விவேக் போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம் வருகிற ஜுலை 28 ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 3 நிமிடம் 33 வினாடிகள் கொண்ட இந்த ட்ரெயிலரின் சீன்கள் அனைத்தும் படு மாசாக உள்ளது என பெரும்பாலானோர் பதிவிட்டு வருகின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என 5 மொழிகளில் உருவாகியுள்ளது. தி லெஜெண்ட் படத்தில் இருந்து முன்னதாக மோசலோ மோசலு பாடலின் லிரிகள் வீடியோவும், வாடிவாசல் மற்றும் போ போ போ பாடலின் வீடியோ காட்சியின் வெளியாகி மக்களிடம் பலத்த வரவேற்பை பெற்றுவருகிறது.
இந்நிலையில், இன்று மாலை 5.30 மணிக்கு மோசலோ மோசலு பாடலின் வீடியோ தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் வெளியானது. இந்த பாடலின் வரிகளை பா.விஜய் எழுதியுள்ளார். மேலும் பாடலுக்கு ராஜூ சுந்தரம் கோரியோ செய்துள்ளார். அர்மான் மாலிக், முகேஷ் முகமத் ஆகியோர் பாடியுள்ள இந்த பாடல் ஹிட் அடித்து வருகிறது.