நயன்தாராவுடன் ஜாலியாக லாங் ஹாலிடே டூருக்கு பிளான் போட்ட விக்னேஷ் சிவன்!! அடுத்தது என்ன..?

நயன்தாராவுடன் ஜாலியாக லாங் ஹாலிடே டூருக்கு பிளான் போட்ட விக்னேஷ் சிவன்!! அடுத்தது என்ன..?
Published on
Updated on
2 min read

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா, ‘நானும் ரவுடி  தான்’ படம் மூலம் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் வசம் கொண்டார். தற்போது தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான காதல் ஜோடிகளாக திகழ்ந்து வருகிறார்கள் விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி. இப்படி பரபரப்பாக இணையத்தில் பேசப்பட்டு வரும்  இவர்கள் எப்போது திருமணம் செய்துகொள்ள போகிறார்கள் என அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவு செய்து, தற்போது நடந்து கொண்டிருக்கும் பணிகள் முடிந்தவுடன் நயன்தாராவுடன் ஒரு லாங் ஹாலிடே டூர் செல்ல உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் நயன்தாராவுடன் பயணம் செய்யும் அனுபவத்தை தான் மிகவும் மிஸ் செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவர் குறிப்பிட்டுள்ளதை பார்த்தால் வருகின்ற ஏப்ரல் மாதம் வெளியாக உள்ள ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருப்பதால் அந்த பணிகள் முடிந்தவுடன் நயன்தாராவுடன் அவர் ஒரு லாங் ஹாலிடே டூர் செல்ல இருப்பதாக தெரிகிறது.

பொதுவாகவே விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் அடிக்கடி வெளிநாடு சென்று வருவது வழக்கம். ஆனால், இந்த முறை இவர்கள் லாங் ஹாலிடே பயணத்தில் செல்ல இருப்பதால், இந்த ட்ரிப்பில் அவர்களது திருமணம் நடைபெறுமா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிப்பார்த்து வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com