திருமண வரவேற்பு: தாம்பூலப் பையில் மதுபானம் வழங்கிய உறவினர்கள்!

திருமண வரவேற்பு: தாம்பூலப் பையில் மதுபானம் வழங்கிய உறவினர்கள்!

புதுச்சேரியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தாம்பூலம் பையுடன் மதுபானம் வழங்கப்பட்டது. 

திருமண வரவேற்பிற்கு வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு திருமணம் முடிந்தவுடன் உணவு அருந்திவிட்டு செல்லும்போது தாம்பூலம் கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த தாம்பூல பையில் சாத்துக்குடி, மாம்பழம் உள்ளிட்ட பழங்கள், இனிப்பு பண்டங்கள், தேங்காய் உள்ளிட்டவை வைத்து வழங்கப்பட்டு வந்தன.

ஆனால், சென்னை சேர்ந்த நிர்மல் என்பவருக்கும் புதுச்சேரி வண்ணாரப்பேட்டையை  சேர்ந்த ஆரதி என்ற மணமகளுக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி புதுச்சேரி நகரப் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த திருமண வரவேற்பில் சென்னை மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மணமக்களின்  உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருமண வரவேற்பில் கலந்து கொண்ட உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மகிழ்ச்சியடையும் வகையில் மணமகள் வீட்டார் வழங்கிய தாம்பூல பையில் தேங்காய், பழம் வெத்தலை பாக்கு உடன் மதுபான பாட்டிலையும் சேர்த்து கொடுத்து திருமணத்திற்கு வந்த விருந்தாளிகளை மகிழ்ச்சியிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தினார்

.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com